தி.மு.க பெண் பிரமுகர் புகார்: தமிழக வெற்றி கழகத்தினர் மீது நடவடிக்கை கோரிக்கை!

தி.மு.க பெண் பிரமுகர் புகார்: தமிழக வெற்றி கழகத்தினர் மீது நடவடிக்கை கோரிக்கை!
X
தமிழக வெற்றி கழகத்தினர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் ஆபாச புகைப்படங்கள் பரப்புவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண் நிர்வாகி புகார்.
தமிழக வெற்றி கழகத்தினர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் ஆபாச புகைப்படங்கள் பரப்புவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண் பிரமுகர் வைஷ்ணவி (20) கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். முன்னதாக தமிழக வெற்றி கழகத்தில் செயல்பட்டு வந்த அவர், கொள்கை வேறுபாடு காரணமாக கடந்த மே 3ம் தேதி விலகி, பின்னர் தி.மு.க-வில் இணைந்துள்ளார். அதன் பின்னர் கடந்த மூன்று மாதமாக வெற்றி கழகத்தினர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மோசமாக திரித்து அவதூறு பரப்பி வருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மன உளைச்சலுக்கு காரணமாக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி பெற்றுக் கொண்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story