கோவை: திருச்சி சிவா மீது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்!

கோவை: திருச்சி சிவா மீது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் புகார்!
X
தி.மு.க எம்.பி திருச்சி சிவா, காமராசரை குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்.
தி.மு.க எம்.பி திருச்சி சிவா, காமராசரை குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி சிவா கூறியது திமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் யுவராஜ் வலியுறுத்தினார். மேலும், காமராஜரைப் பற்றி அவதூறாக பேசிய நிலையில், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் அதை நியாயப்படுத்துவது ஏற்க முடியாது என்றும், கூட்டணிக்கட்சிகள் மக்களுக்கான பிரச்சனைகளை பேச மறுப்பதையும் அவர் விமர்சித்தார்.
Next Story