கரூர்-கல்லூரி மாணாக்கர்கள் இடையே ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு.

கரூர்-கல்லூரி மாணாக்கர்கள் இடையே ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு.
கரூர்-கல்லூரி மாணாக்கர்கள் இடையே ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெறும் நோக்கில் கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்ப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் அரசு கலைக்கல்லூரி முன்பாக கரூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பாக ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்த விளக்க கையேட்டினை மாணாக்கர்களுக்கு வழங்கும் நிகழ்வு மாணவரணி மாவட்ட செயலாளர் சரவண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் , மாநகர செயலாளர் கனகராஜ் , தெற்கு நகரச் செயலாளர் சுப்பிரமணி , மாமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட மாணவரணி மாநகர அமைப்பாளர் செல்வம், துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன் , திவாகர், மணிகண்டன், மணி, ஸ்ரீநாத், அருள்முருகன், சரண்ராஜ், பிரபாகரன், அங்கு லோகேஷ், செல்வேந்திரன் , மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணாக்கர்களிடையே துண்டறிக்கையை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story