கழிவுநீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

கழிவுநீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
X
காங்கேயம் சக்தி நகர்வில் கழிவுநீர் தொட்டியை அகற்ற நடவடிக்கை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு சக்தி நகர் 4-வது வீதியில் மூன்று அடுக்கு கட்டிடம் உள்ளது. இதற்கான கழிவுநீர் தொட்டி தார்சாலை மற்றும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்கவாட்டுக் குழாய்களை அமைத்து கழிவு நீர் நிலத்தடிக்குள் வெளியேறும்படி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் நிலம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. மேலும் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டால் வீடுகளுக்கு செல்லும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே பொது இடத் தில் கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்று காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து ஆணையர் பால்ராஜ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து தொட்டியை அகற்ற உத்தரவிட்டனர்.
Next Story