நடையனூர் - தெருவிளக்கு எரியவில்லை என்றாலும் மனு கொடுக்கலாம். எம்எல்ஏ விளக்கம்.

நடையனூர் - தெருவிளக்கு எரியவில்லை என்றாலும் மனு கொடுக்கலாம். எம்எல்ஏ விளக்கம்.
நடையனூர் - தெருவிளக்கு எரியவில்லை என்றாலும் மனு கொடுக்கலாம். எம்எல்ஏ விளக்கம். கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா திருக்காடுதுறை ஊராட்சியில் நடையனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக கரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வளர்மதி,திருக்காடுதுறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எம் எல் ஏ இளங்கோ பல்வேறு துறைகள் சார்பாக மனுக்கள் அளித்தால் உடனே தீர்வு காண்பதற்காக இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் உங்கள் தெரு விளக்கு எரியவில்லை என்று மனு கொடுத்தாலும் அதற்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார். இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து உடனடியாக ஐந்து நபர்களுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் பயிர் கடனாக ரூ 3,88,000- வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ இளங்கோ.
Next Story