கரூர்-பொருட்கள் வழங்க ஆள் இல்லை- ரேஷன் கடை இழுத்து மூடல்.

கரூர்-பொருட்கள் வழங்க ஆள் இல்லை- ரேஷன் கடை இழுத்து மூடல்.
கரூர்-பொருட்கள் வழங்க ஆள் இல்லை- ரேஷன் கடை இழுத்து மூடல். கரூர்- காந்திகிராமம் பகுதியில் நியாய விலைக் கடை (நம்பர் 3) செயல்பட்டு வருகிறது. இதில் இந்திரா நகர், கே.கே.நகர், சக்திநகர், ராஜாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் அட்டைகள் உள்ளது. இங்கு கடந்த ஒரு வருட காலமாக வாரத்தில் மூன்று நாள் மட்டும் கடை செயல்படுவதாகவும், அதிலும் ஆட்கள் பற்றாக்குறை, டிஜிட்டல் சேவை குறைபாடு காரணமாக சரியான முறையில் பொருள்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று நியாய விலை கடையை திறந்தபோது, பொருட்களை வாங்குவதற்காக 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். அப்போது தான் ஒருவர் மட்டும்தான் இருப்பதாகவும், பொருட்கள் வழங்க முடியாது என ரேஷன் கடை ஊழியர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொருட்கள் போட முடியவில்லை என்றால் கடையை பூட்டி விட்டு செல்லுங்கள் என பொதுமக்கள் கூறிய போது,ரேஷன் கடையை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story