‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு களப்பயணம்’

X
திண்டுக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறையை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு களப்பயணம்’ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து களப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய ஒருநாள் களப்பயணத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஜுன் 5-ஆம் தேதி நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின போட்டிகளில் வெற்றி பெற்ற 7-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவ, மாணவியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் இக்களப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். களப்பயணம் துவங்குவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவ, மாணவிகள் தங்கள் களப்பயணம் குறித்த ஆர்வம், வானிலை ஆராய்ச்சி மையம், சுற்றுச்சூழல் சுற்றுலா தளங்களைப் பார்வையிட உள்ளது குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

