ஜெயங்கொண்ட சோழபுரம்-உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ பங்கேற்பு.

ஜெயங்கொண்ட சோழபுரம்-உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ பங்கேற்பு.
ஜெயங்கொண்ட சோழபுரம்-உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்எல்ஏ பங்கேற்பு. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குறைகள் குறித்த மனுக்களையும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்களையும் அளித்தனர். மனுக்களை பெற்று பதிவு செய்த அதிகாரிகள் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தவர்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்டங்களை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story