சிவகாசி அருகே சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனர் உள்ளிட்ட இருவரை துரிதமாக மீட்டு தனது காரில் அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி....

X
சிவகாசி அருகே சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனர் உள்ளிட்ட இருவரை துரிதமாக மீட்டு தனது காரில் அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.... விருதுநகர் மாவட்டம் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை பூவநாதபுரம் சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஈஞ்சார் பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற ராமர் என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பயிலும் மாணவன் வருண் கிருஷ்ணன் என்பவரும் பலத்த காயமடைந்து சாலையில் கிடந்துள்ளனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி நோக்கி சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காயமடைந்தவர்களை மீட்டு தனது காரில் அழைத்துச் சென்று சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததுடன் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரை காக்க சற்றும் தாமதிக்காமல் தனது காரில் அவர்களை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் செயலை பலரும் பாராட்டினர்.
Next Story

