கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்கியதால் மிரண்ட வவ்வால்கள் - பட்டாசு வெடிக்க, மேளதாளங்கள் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பாதகைகள் வைக்க கோரிக

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்கியதால் மிரண்ட வவ்வால்கள் - பட்டாசு வெடிக்க, மேளதாளங்கள் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பாதகைகள் வைக்க கோரிக
X
கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்கியதால் மிரண்ட வவ்வால்கள் - பட்டாசு வெடிக்க, மேளதாளங்கள் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பாதகைகள் வைக்க கோரிக்கை*
காரியாபட்டியில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்கியதால் மிரண்ட வவ்வால்கள் - பட்டாசு வெடிக்க, மேளதாளங்கள் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பாதகைகள் வைக்க கோரிக்கை விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் பழந்தின்னி வவ்வால்கள் வசிப்பதால், அப்பகுதியில் பட்டாசு வெடிக்கவோ, மேள தாளங்கள் முழங்கவோ, ஒலி எழுப்பவோ கூடாது என வனத்துறை சார்பில் கட்டுப்பாடு உள்ளது. நேற்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்கியதால் வவ்வால்கள் மிரண்டு கூட்டம் கூட்டமாக பறந்தன. கட்டுப்பட்டை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு தெரியும் வகையில் எச்சரிக்கை பாதகைகள் வைக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள பழமையான ஆலமரத்தில் 150 ஆண்டுகளாக பழந்தின்னி வவ்வால்கள் வசிக்கின்றன. இவைகள் தினந்தோறும் இறை தேடி தேனி, கம்பம் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் சென்று மீண்டும் இங்கு வந்து விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை காவல் நிலையம் வளாகத்தில் இருப்பதால் போலீசார் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர். காவல் நிலையம் அருகே வெடி வெடித்து, மேளதாளங்கள் முழங்கி செல்லும்போது வவ்வால்கள் மிரண்டு கூட்டம் கூட்டமாக பறந்தன. இதை அறிந்த போலீசார் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையினருடன் கலந்து. ஆலோசித்து, காவல் நிலையம் அருகே வரும்போது சத்தமாக கோஷம் போட, வெடி வெடிக்க, மேளதாளங்கள் முழங்க, ஒலி எலுப்ப கூடாது என வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. மேலும் காவல் நிலைய வளாகத்தில் இருப்பதால் வவ்வால்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஆனால் சுற்றி 100 மீட்டர் அளவில் வெடி வெடிக்க, ஒலி எழுப்ப, மேளதாளங்கள் முழங்க அனுமதியில்லை என்று பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பாதகைகள் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இப்பகுதியில் எந்தவித அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பாதாகைகள் வைக்காததால் நேற்று அப்பகுதியில் ஊர்வலமாக வந்தவர்கள் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்து, மேள தாளங்கள் முழங்கி வந்தனர். அப்போது மரத்தில் தங்கி இருந்த வவ்வால்கள் மிரண்டு கூட்டம் கூட்டமாக பறக்கத் துவங்கின. இதனை இயற்கை ஆர்வலர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என கட்டுப்பாடு இருந்தும், மீறி செயல்பட்டதை கண்டித்தனர். காரியாபட்டி காவல் நிலையம் சுற்றி 100 மீட்டர் தூரம் வெடி வெடித்து, மேளதாளங்கள் முழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்..
Next Story