கேரள முன்னாள் முதல்வர் கே.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி அஞ்சலி நிகழ்ச்சி 

கேரள முன்னாள் முதல்வர் கே.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி அஞ்சலி நிகழ்ச்சி 
X
அஞ்சலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான கே.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டக்குழு அலுவலகத்தில், வீரவணக்கம், செவ்வஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார், என்.சரவணன், எஸ்.செல்வராஜ், கே.அபிமன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ், அரங்க தோழர்கள் ஆர்.புண்ணியமூர்த்தி, எஸ்.கோதண்டபாணி, அஜய்ராஜ், ஆனந்தன், விஜயகுமார், மாநகரத்தோழர்கள் வீ.கரிகாலன், சி.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தோழரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story