நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவை கண்டித்து ஏராளமான பொது

X
விருதுநகரில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவை கண்டித்து ஏராளமான பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் ... கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, காமராஜர் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என மாநிலம் முழுக்க கண்டனக் கூட்டம் நடத்தி வந்தார். ஆனால் காமராஜருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும் அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார் என்றும் அப்பொழுது திமுக அரசை எதிர்த்து தான் காமராஜர் பேசுகிறார் . இருந்தாலும் காமராஜரின் உடல்நிலையை கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்த சொன்னார். ஆகையால் காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னால் கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு நீங்கள்தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக அவதூறு கருத்து பரப்பி பேசிய திருச்சி சிவாவை கண்டித்து, இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில், ஏராளமான பொதுமக்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

