விருதுநகர் அருகே நள்ளிரவில் பட்டாசு ஆலை காவலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை*

X
விருதுநகர் அருகே நள்ளிரவில் பட்டாசு ஆலை காவலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை விருதுநகர் அருகே ஓ. கோவில்பட்டி பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது இந்த பட்டாசு ஆலையில் கடந்த ஐந்து வருடமாக முத்தலாபுரத்தைச் சார்ந்த பழனி முருகன் என்பவர் இரவு நேர காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணிக்கு வந்த இவர் மர்ம நபர்களால் தலையில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் காவலர் பழனி முருகன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அங்கு சென்று ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் இறந்த பழனி முருகனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து கொலை செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

