ஆதார் காடுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்*

X
N. சண்முக சுந்தராபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ரேஷன் கார்டு மற்றும் , ஆதார் காடுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட என். சண்முகசுந்தராபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் கடந்த பல வருடங்களாக குடிநீர் வசதி, வாறுகால் வசதி, சுகாதார வளாகம் வசதி, மயானக்கரை வசதி, அரசு பள்ளிக்கு செல்லும் பாதை வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனக் கூறி கடந்த 14ஆம் தேதி சண்முகசுந்தராபுரம் விளக்கு பகுதியில் 100 க்கம் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை அறிந்த அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்தை அடுத்து போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர் . ஆனால் இதுவரை தங்கள் கிராமத்திற்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறி இன்று N. சன்முக சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது ஆதார் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக வந்திருந்தனர் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை ஈடுபட்டனர் இதை அடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் காரணமாக அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Next Story

