பொதுமக்கள் குறைதீர்க்கூட்டத்தில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா*

X
பொதுமக்கள் குறைதீர்க்கூட்டத்தில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு கண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அலுவலக வளாகத்திற்குள் வந்த ஆட்சியர் சுகபுத்ரா குறைதீர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லாமல் பின்பக்கம் வழியாக மனுக்கள் எழுதும் பக்கத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.மனுக்கள் எழுத பணம் பெறப்படுகிறாதா என்பதையும்,வரிசைப்படி மனு பதியப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து தன்னார்வலர்கள் மூலம் இலவசமாக மனு எழுதித்தரப்படுவதை ஆட்சியர் உறுதி செய்தார்.மேலும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் பொதுமக்களிடம் தனிநபர்கள் மனு எழுதித்தர அதிக பணம் வசூலிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அங்கும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்,தன்னார்வலர்கள் மூலம் மனு இலவசமாக எழுதித்தரப்படுவதை அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு தனிநபர்கள் பணம் பெற்றுக்கொண்டு மனு எழுதித்தர ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடமளிக்கூடாது என அங்கிருந்த காவல்துறையிடம் சொல்லி அவர்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.
Next Story

