வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்
X
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP II
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP II & IIA மற்றும் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பொது பாடப்பிரிவு வகுப்புகள் 23.07.2025 அன்று முதல் தொடங்கப்படவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தகவல். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது TNPSC GROUP II&IIA தேர்வில் சார்பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் போன்ற 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும், மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (LIC,AAO,IB,EPFO,ASST,COMMANDANT..,) பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு(வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல் அறிவியல்…) நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு(தமிழ்/ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் TNPSC GROUP II&IIA – தேர்விற்கும் பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நாளை 23.07.2025 முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை வசதியுடன் கூடிய வகுப்பறைகள், வாரத்தின் அனைத்து வேலைநாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும், போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி உள்ளது, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும், பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் எடுக்கப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை அணுகி தங்களை பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 94990 55913 என்ற அலுவலக அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது - மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் முதியோர் நலன் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியில் (Senior Citizen App) seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in மூத்த குடிமக்களுக்கு தேவையான விவரங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், முதியோர் உதவி எண் 14567 மூலம் முதியோர்களுக்கு தங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள், ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் மற்றும் பராமரிப்பாளர் சேவைகள் செயல்பாட்டு மையங்கள் போன்ற விவரங்களுக்கு 14567 எண்ணிற்கு தொடர்பு கொண்டு காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். எனவே பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இச்செயலியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story