மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்

பெரம்பலூர் மாவட்டம் மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது - மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் முதியோர் நலன் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியில் (Senior Citizen App) seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in மூத்த குடிமக்களுக்கு தேவையான விவரங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், முதியோர் உதவி எண் 14567 மூலம் முதியோர்களுக்கு தங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள், ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் மற்றும் பராமரிப்பாளர் சேவைகள் செயல்பாட்டு மையங்கள் போன்ற விவரங்களுக்கு 14567 எண்ணிற்கு தொடர்பு கொண்டு காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். எனவே பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இச்செயலியினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

