திருச்சி சிவாவை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி சிவாவை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
குமாரபாளையத்தில் திருச்சி சிவாவை கண்டித்து பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரை அவதூறாக பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை கண்டித்தும், கிட்னி திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள தி.மு.க. ஆனந்தனை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் காமராஜரை அவதூறாக பேசிய தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவாவை கைது செய்ய வலியுறுத்தியும், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கிட்னி திருட்டு வழக்கில், புரோக்கராக செயல்பட்ட தி.மு.க.வை சேர்ந்த ஆனந்தன் என்பவனை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து, கண்டன உரையாற்றினார். இதில் நகர பொதுச் செயலர் சுரேஷ்குமார், வடக்கு மண்டல தலைவர் ராகவன், மாவட்ட துணை தலைவி புவனேஸ்வரி, நகர செயலர் சண்முகராஜன், வைரவேல், நாடார் சங்க பொறுப்பாளர் ரவீணா, பா.ஜ.க.வினர் ராஜா, ராமகிருஷ்ணன், ரஜினி, மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story