விபத்து ஏற்படும் வகையில் நடைபாதை ஆக்கிரமிப்பு

X
Komarapalayam King 24x7 |22 July 2025 9:52 PM ISTகுமாரபாளையம் நகரில் சேலம் சாலையில் போக்குவரத்து இடையூறு, மற்றும் விபத்து ஏற்படுத்தும் விதமாக நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து, கட்டுமானங்கள் நடைபெறுகிறது.
குமாரபாளையம் நகரில் சேலம் சாலையில் ஆர்.ஏ.எஸ். திரையரங்கு எதிரில் மூன்றடுக்கு கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டப்பட்டு வரும் மூன்றடுக்கு வணிக வளாகம் கட்டுமான பணியில், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து, கட்டுமானங்கள் நடைபெறுகிறது. இந்த குறுகிய சாலையில் கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக ரேம்ப் கட்டியுள்ளனர். இதே இடத்தில்தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு, போக்குவரத்து நெரிசலில் ஒரு கல்லூரி மாணவி வாகனத்தில் சென்ற பொழுது, அதே கட்டடத்தின் எதிரில் கீழே விழுந்து, அந்த மாணவி தலையில் சக்கரம் ஏறி உயிர் இழக்க நேரிட்டது. ஆகையால் இது போன்று மீண்டும் இதுபோன்று உயிரிழப்புக்கள் ஏற்படாத வகையில், . அரசு உடனடியாக முன் வந்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
