இந்திய தேசியக் கொடி தினம் கொண்டாட்டம்

இந்திய தேசியக்  கொடி  தினம் கொண்டாட்டம்
X
இந்திய தேசிய கொடி தினம் குமாரபாளையத்தில் கொண்டாடப்பட்டது.
இந்திய தேசிய கொடி தினம் குமாரபாளையம் புத்தர் வீதியில் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சவுடேஸ்வரி பங்கேற்று பேசியதாவது: தேசியக்கொடி நம் அனைவரின் போற்றுதலுக்குரியதாகும். கொடியை வணங்குதல், நம் நாட்டையும், சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் அனைவரையும் வணங்குதல் போலாகும். இந்தக் கொடியானது, பிங்கலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து காந்தியால் முன்மொழியப்பட்டது. கொடியின் நடுவில் இருந்த நூற்புச் சக்கரம், 1947 ஆம் ஆண்டு அசோகச் சக்கரமாக மாற்றம் செய்யப்பட்டது. கொடியானது காதி துணியினால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிக்கப்பட்டிருந்தது. எண்ணற்ற தியாகிகளின் உயிர் தியாகத்திற்கு பின், சுதந்திர கொடியாக பட்டொளி வீசி பறந்தது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வைக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் என தேசியக்கொடி நாள் தினத்தில் மாணவ மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். விழாவில் நிர்வாகிகள் ஜமுனா, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story