பட்டை நாமத்துடன் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் பீட்டர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிைல வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களுக்கு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்யும் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் பட்டை நாமம் போட்டப்படி பங்கேற்றனர். இதில் மாநிலத் துணைச் செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
Next Story

