ஏற்காட்டில் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் பயிற்சி

X
தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் புத்தூர் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட தொகுப்பு விவசாயிகளுக்கு 3-வது ஆண்டாக பாரம்பரிய வேளாண்மை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்காடு வேளாண்மை அலுவலர் பழனிசாமி வரவேற்று வேளாண் திட்டங்கள் குறித்து பேசினார். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மாலதி இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும், கூட்டு பண்ணைய திட்டம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். ஏற்காடு வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.ஷீரின் சிறுதானிய சாகுபடியில் மதிப்பு கூட்டுதல் குறித்து பேசினார். தொடர்ந்து வேளாண்மை உதவி அலுவலர் (வேளாண் வணிகம்) சிவகுமார், உதவி தோட்டக்கலை அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பேசினர். முடிவில் வாழவந்தி வேளாண்மை உதவி அலுவலர் ராஜவேலு நன்றி கூறினார். நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story

