மனைவியை கடப்பாறையால் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கடப்பாறையால்  கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
X
மனைவியை கடப்பாறையால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மாவில்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் (67). இவரது மனைவி சின்னம்மாள் (55). இந்த தம்பதியர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15.1.2023 அன்று ஏற்பட்ட தகராறில் சண்முகம் மனைவியை கடப்பாறையால் தாக்கி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மாசார்பட்டி காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் அனிதா வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்தார். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜரானார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் மாரிச்சாமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
Next Story