சேலத்தில் ஆடித்திருவிழா:கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா

X
சேலத்தில் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் என்றாலே சேலம் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டுவது வழக்கம். சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஆடித்திருவிழாவிற்காக கோவிலில் கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

