பிடிவாரண்டு பிறப்பித்து தேடப்பட்ட ரவுடி கைது

X
சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் மீது அன்னதானப்பட்டி மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணை சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 4 மாதமாக அவர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்த நிலையில் அன்னதானப்பட்டி பகுதியில் சுற்றித்திரிந்த குமாரை, போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

