மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்
X
வழங்கல்
மேலப்பழங்கூர் அரசு உதவி பெறும் பள்ளியில் புத்தக துாதுவர் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறுகதை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், புத்தக துாதுவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பான இடத்தில் பணிபுரிவோர் மற்றும் தொழிலதிபர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு கொடையாக புத்தகங்களை கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கம்.மாதந்தோறும் ஒரு புத்தகம் வழங்குவதன் மூலம் மாணவர்களின் வீடுகளில் சிறிய நுாலகம் அமைத்திடலாம். அதன்படி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அழகிரிசாமி எழுதிய அன்பளிப்பு என்ற புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு, தலைமை ஆசிரியர் ஜான் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியை ஜான் பிரிட்ரோ கிரேஸ் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட புத்தக துாதுவர் பால பார்த்திபன், பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
Next Story