கியாஸ் சிலிண்டர்களுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு

X
சேலம் சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (வயது 50), லாரி டிரைவர். முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சங்கர்கணேஷ், கியாஸ் சிலிண்டர்களுடன் லாரியை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்த போது லாரி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் தலைமறைவாக இருப்பதும், அவர் தான் லாரியை கடத்தியதும் தெரிந்தது. இந்த நிலையில் கடத்தப்பட்ட லாரி நெத்திமேட்டில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து காலி சிலிண்டர்களுடன் லாரியை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
Next Story

