ஆற்காட்டில் மண்டல நிர்வாக இயக்குனர் ஆய்வு

X
ஆற்காடு நகராட்சியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவி ருத்தி திட்டத்தின்கீழ் பாலாற்றில் குடிநீர் சேமிப்பு கிணறு அமைத்தல், குழாய் பதித்தல், மின்மோட்டார் அறை, பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நகராட்சிகளின் வேலூர் மண்டல இயக்குனர் நாராயணன், பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை தரமாகவும், மழைகாலத்திற்குள் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாணடியன், ஆணையாளர் வேங்கடலட்சுமணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story

