சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

X
சேலம் தெற்கு கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சேலம் தெற்கு கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் திருநாவுகரசு கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து, மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

