தொப்பம்பட்டி- கடந்த மாதம் நடந்த விபத்திற்கு நேற்று வழக்கு பதிவு.

தொப்பம்பட்டி- கடந்த மாதம் நடந்த விபத்திற்கு நேற்று வழக்கு பதிவு.
தொப்பம்பட்டி- கடந்த மாதம் நடந்த விபத்திற்கு நேற்று வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா , துக்காச்சி அருகே காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது 34. இவர் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி மதியம் 12 மணியளவில் தென்னிலையில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார் . அப்போது தொப்பம்பட்டி ரைஸ்மில் அருகே சென்றபோது டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் விஜயகுமாருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் மணி வயது 60 என்பவர் அளித்த புகாரில் தென்னிலை காவல் துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story