திமுக மாணவரணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு குறித்த துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட "ஓரணியில் தமிழ்நாடு" என்னும் பிரச்சாரத்தை கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் டைகர்குணா தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொலம்பாக்கம் கலை அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் கல்லூரி மாணவர்களிடையே திமுக மாணவர் அணி நிர்வாகிகள் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் திமுக மாணவர் அணி சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை குறித்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழக அரசு மாணவர்களுக்கு செய்து வரும் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களை எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி திமுகவில் இணையுமாறு பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சரளாதனசேகரன், ஒன்றிய செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாணவரணி ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

