வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேயர் ஆய்வு

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேயர் ஆய்வு
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 10வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (ஜூலை 23) மேயர் ஆய்வு செய்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். அப்பொழுது பள்ளியில் சிதலம் அடைந்து காணப்பட்ட மேற்கூறையை சரிசெய்ய அதிகாரிகளுக்கு மேயர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்பொழுது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story