உங்களுடன் ஸ்டாலின் திட்டம் - மேயர் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் - மேயர் ஆய்வு
X
திண்டுக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் - மேயர் ஆய்வு
மக்களின் அடிப்படை தேவைகளை செய்து தர, அவர்களின் பகுதிக்கே அரசு நிர்வாகத்தை அனுப்பி வைக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான "உங்களுடன் ஸ்டாலின் " திட்டத்தினை கழகத் துணைப் பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் ஜான் பால் பள்ளி அருகிலுள்ள டி எம் எஸ் எஸ் மஹாலில் நடைபெற்ற முகாமினை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஸ் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன்,பகுதி பொறுப்பாளர்கள் சந்தோஷ் முத்து, ஜானகிராமன், மண்டல தலைவர் ஆனந்த், மாமன்ற உறுப்பினர் சுவாதி ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஐந்தாவது மற்றும் ஆறாவது வார்டு கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story