திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

X
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நகரின் மைய பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல், ஆத்தூர், கன்னிவாடி, மயிலாப்பூர், சித்தையன்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் ஓசூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை ரூ.800-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், அரளி ரூ.250-க்கும், ரோஸ் ரூ.180-க்கும், சம்மங்கி ரூ.200-க்கும் , செண்டுமல்லி ரூ.100-க்கும் விற்பனையாகிறது.
Next Story

