பருத்தி அறுவடையில் விவசாயிகள் தீவிரம்

பருத்தி அறுவடையில் விவசாயிகள் தீவிரம்
X
திருவாரூர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் மும்முறமாக நடைபெறும் பருத்தி மகாசூல்
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர்.அதன்படி நெல் சாகுபடியடுத்து பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர்,வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரினை விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டு காலமாக 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில் 4வது ஆண்டாக நாடப்பாண்டிலும் இதேபோன்று 45 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளதால் தற்போது இந்த பருத்தி பயிரானது அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் அதிலிருந்து பருத்தி பஞ்சினை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
Next Story