கரூர்-நகையை பறித்து காரில் தப்பியவரை சுற்றி வளைத்த காவல்துறையினர்.

கரூர்-நகையை பறித்து காரில் தப்பியவரை சுற்றி வளைத்த காவல்துறையினர்.
கரூர்-நகையை பறித்து காரில் தப்பியவரை சுற்றி வளைத்த காவல்துறையினர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த வலையபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் தனது காரில் அங்கிருந்து தப்பித்துள்ளார். இதனை பார்த்த மோகனூர் காவல் நிலைய ஆய்வாளர் கரூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் பசுபதிபாளையம் போக்குவரத்து ஆய்வாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி கிராமத்தை அடுத்த போக்குவரத்து நகர் பகுதியில் அந்த வழியாக வந்த காரை பேரி கார்ட் அமைத்து பிடிக்க முற்பட்டனர். அப்போது, அந்த கார் திரும்ப முற்பட்ட போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமாரும், அவரது ஓட்டுநர் கோபியும் தைரியமாக ஜீப்பை விட்டு இறங்கி போய் அந்த காரின் கண்ணாடியை கையால் உடைத்து, ஓடுநர் இருக்கையில் இருந்த நபரின் முகத்தில் குத்து விட்டு, காரின் சாவியை எடுத்து தப்பிக்க விடாமல் செய்தனர். தொடர்ந்து பசுபதிபாளையம் போலீசார் காரிலிருந்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் திருச்சி மாவட்டம் பெரிய மிளகு பாறை ராஜா தெருவை சார்ந்த வெங்கடராமன் (வயது 37) என்பதும், அவரது அம்மா பாப்பு பெண் சிறை காவலர் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்ட நபரிடமிருந்து தங்க சங்கிலி பாதியை கைப்பற்றி மோகனூர் காவல் ஆய்வாளர் லட்சுமணனிடம் வெங்கடராமனையும், தங்க நகையையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story