புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி!

புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி!
X
புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி!
மேல்மருவத்தூரில் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி! செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் அ.ஆ.அகத்தியன் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன், செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, மாவட்ட ஆட்சியர் சினேகா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சக்கரை அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவர் வி.ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் ஜனனிராஜா கிருஷ்ணமூர்த்தி,நிர்மல் குமார், ஆறுமுகம், நாகப்பன், பாஸ்கர், நாகராஜ், உள்ளிட்ட கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story