பழுதடைந்த அரசு பேருந்து : பயணிகள் ஆத்திரம் – கண்ணாடி உடைப்பு!
கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் அருகே இன்று காலை பழுதடைந்த அரசு பேருந்தில் நேற்று பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. பொள்ளாச்சி-கோவை பாதையில் வந்த பேருந்தின் ரேடியேட்டர் பழுதடைந்ததால் புகை கிளம்பியதாக கூறப்படுகிறது. இதை கண்ட ஓட்டுநர் சாலை ஓரமாக நிறுத்தி, இன்பின் மூடியை திறந்து பரிசோதித்தார். பயணிகள் அச்சத்தில் கீழே இறங்கினர். வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்த சில பயணிகள், பெரும் அதிருப்தியில் இருக்கையின் ஓரக் கண்ணாடிகளை உடைத்தனர். சம்பவத்தை பார்த்த சில பொதுமக்கள், அரசு பேருந்துகள் சுந்திரா ட்ராவல்ஸாக மாறிவிட்டதாகக் கூறி கிண்டலுடன் சென்றனர்.
Next Story



