கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் - அச்சத்தில் பொதுமக்கள்!

கோவையில் தொண்டாமுத்தூர், சாடிவயல், காருண்யா நகர், மத்துவராயபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோவையில் தொண்டாமுத்தூர், சாடிவயல், காருண்யா நகர், மத்துவராயபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வீட்டின் அருகே மேயும் பன்றிகள் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளியே செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, காப்புக்காடு எல்லையை 3 கி.மீ. வரை தாண்டும் காட்டுப் பன்றிகளை சுட அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான துப்பாக்கி பயிற்சி கோவையில் கடந்த மாதம் நடைபெற்றது. பன்றிகளை சுட அனுமதி விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Next Story