கோவையில் மாணவி தற்கொலை: டார்ச்சர் செய்த இளைஞருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் குற்றச்சாட்டு !

X
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபிலா, கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மகளிர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். காட்டூர் காவல் துறை இது தொடர்பாக தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ரூபிலா மீது ஒரு இளைஞர் தொடர்ந்து தொல்லை அளித்ததாகவும், அவரது டார்ச்சரால் தான் தற்கொலை செய்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அந்த இளைஞருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய அவர்கள், அந்த இளைஞருக்கு அரசியல் ஆதாரம் இருப்பதால்தான் போலீசார் தயங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். ரூபிலாவின் பெற்றோர், தங்களுடைய மகளின் மரணத்திற்கு காரணமான இளைஞருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாரை வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

