உத்திரமேரூரில் பறிமுதல் லாரியிலிருந்து பேட்டரி திருட்டு

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி, சின்ன நாரசம்பேட்டை தெருவில், காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், கஞ்சா, சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல் நிலையம் எதிரே உள்ள, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தி வருகின்றனர். அவ்வாறு வாகனங்களை நிறுத்த அங்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று, இரண்டு மாதமாக, சக்கரம் கோதண்டராமர் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த லாரியில் உள்ள மூன்று டயர் பஞ்சர் ஏற்பட்டு, பேட்டரியும் திருடப்பட்டுள்ளது. இதனால், லாரியை தெருவிலிருந்து அகற்ற முடியாத சூழல் உள்ளது. எனவே, சக்கரம் கோதண்டராமர் தெருவில் நிறுத்தப்பட்டுள்ள, பறிமுதல் லாரியை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

