டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் மணிக்கூண்டு பகுதியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க சட்டப்படி தமிழக முதல்வர் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியான பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்குவோம் என்று அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும், சட்டசபையில் அமைச்சர் அறிவிக்கப்பட்ட ரூபாய் 2000 ஊதிய உயர்வினை அனைத்து பணியாளர்களுக்கும் அமல்படுத்தப்பட வேண்டும், பணி நீக்கத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், ஆறு மாதத்திற்குள் பணிநீக்கத்தில் உள்ளவர்களுக்கு ஊதியத்தில் 50 சதவீதமும் ஆறு மாதத்திற்கு மேல் பணி நீக்கத்தில் உள்ளவர்களுக்கு 75% பிழைப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சிவஜோதி வரவேற்புரை நிகழ்த்தினார் மாநிலத் துணைத் தலைவர் கண்ணையன் துவக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோபிநாத் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பிச்சை முத்து வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் முத்து வடிவில் நன்றி உரை நிகழ்த்தினார் மேலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

