காஞ்சிபுரத்தில் மாணவ-மாணவியருக்கு இசை பள்ளியில் சேர அழைப்பு

காஞ்சிபுரத்தில் மாணவ-மாணவியருக்கு இசை பள்ளியில் சேர அழைப்பு
X
காஞ்சிபுரத்தில் இயங்கும் அரசு இசைப்பள்ளியில் சேர, மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்
காஞ்சிபுரத்தில் இயங்கும் அரசு இசைப்பள்ளியில் சேர, மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான, குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Next Story