வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X
நிலக்கோட்டை காவல் நிலையம் எதிரே குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையம் எதிரே உள்ள காலி இடத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் அந்தப் பகுதியில் காய்ந்த செடிகளில் ஏற்பட்ட தீ மல மலவென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பரவியது இதில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் தீப்பிடித்து எரிந்தன மாட்டுவண்டி டயர்களில் தீ பற்றியதால் கரும் புகையுடன் தீ கொழுந்து விட்டு எறிந்தது இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது ஆனால் தீயணைப்பு வண்டி பழுதின் காரணமாக வத்தலகுண்டில் இருந்து தீயணைப்புத்துறை வாகனம் வரவழைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிய பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் கிடைத்த தண்ணீர் மற்றும் பொருட்களைக் கொண்டு தீ பரவலை தடுத்தனர் இதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், வேன் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தீயில் இருந்து தப்பின இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த வத்தலகுண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த சம்பவத்தில் பேரூராட்சி குடிநீர் திட்ட பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பைப்புகள் தீயில் எரிந்து நாசமாகியது.
Next Story