பேரனை வைகை ஆற்றில் முன் ஏற்பாடுகள் தீவிரம்

பேரனை வைகை ஆற்றில் முன் ஏற்பாடுகள் தீவிரம்
X
நிலக்கோட்டை அருகே பேரனை வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசை அன்று புனித நீராட வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக முன் ஏற்பாடுகள் தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பேரனை வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசை தினத்தை யொட்டி புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக செய்து வருகிறது. பேரனை வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மிகவும் பழமையான வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் புகழ்பெற்ற பரிகார ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளடக்கிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று அனைப்பட்டி வைகை ஆற்றில் கூடுவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. புனித நீராடும் பக்தர்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்டவை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதே போல் அதிக அளவில் வரும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பக்தர்களின் வசதிக்காக வத்தலகுண்டு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையம் மற்றும் நிலக்கோட்டை பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் அனைப்பட்டிக்கு இயக்கப்பட உள்ளன.
Next Story