காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை
X
காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகர் ஒன்றாது வீதியில் தியாகு என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வருகிறார். மாதம் இருமுறை காரைக்குடிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து 30 சவரன் தங்க நகை 10 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அருகில் மாடியில் வசிப்பவர்கள், தியாகு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். தியாகு சென்னையிலிருந்து தற்போது காரைக்குடி வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பின்பு வேறு ஏதேனும் பொருள்கள் திருடுபோய் உள்ளதா? என்று தெரிய வரும் தற்போது காரைக்குடி வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story