எல்லமேடு- டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து.

எல்லமேடு- டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து.
எல்லமேடு- டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா , நஞ்சை காளக்குறிச்சி மேற்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் வயது 45. இவர் ஜூலை 12ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கரூர் - சின்ன தாராபுரம் சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது எல்லமேடு நான்கு ரோடு பகுதிக்கு வந்தபோது எதிர் திசையில் வந்த டிராக்டர் லட்சுமணன் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக லட்சுமணனின் மனைவி மைதிலி வயது 33 அளித்த புகாரின் பேரில் 10 நாட்களுக்குப் பிறகு நேற்று விபத்து ஏற்படுத்திய ட்ராக்டர் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.
Next Story