அஜித்குமார் கொலை வழக்கு - சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

அஜித்குமார் கொலை வழக்கு - சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
X
திருப்புவனத்தில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருப்புவணம் காவல் நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்காக தனிப்படை போலீசார் அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார்.இந்த கொலை வழக்கை தற்சமயம் சி.பி.ஐ விசாரனை மேற்கொண்டு வரும் நிலையில் 9 ஆம் நாளான இன்று 4 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் குழு காலை திருப்புவணம் காவல் நிலையம் வந்து அஜித்குமார் தனிப்படை காவல்துறையினரால் விசாரனைக்காக டெம்போ வேனில் அழைத்து சென்ற பகுதிகளில் காவல்துறை சார்பில் எந்த இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்கிற பட்டியல்களை பெற்றுக்கொண்டு, அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரனைக்காக அழைத்து சென்ற 27, 28 ஆகிய தேதிகளில் பதிவான காட்சிகளை சேகரித்து வருகின்றனர். குறிப்பாக மடப்புரம் விலக்கு ஆர்ச் பகுதி சி.சி.டி.வி கேமரா காட்சி, மடப்புரம் அற்நிலையத்துறை அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள், மற்றும் மடப்புரம் பேருந்து நிறுத்த பகுதியில் அஜித்குமாரின் இல்லம் செல்லும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் ஆகியவற்றை சி.சி.டி.வி தொழில்நுட்ப வல்லுநரின் உதவியுடன் சேகரித்து வருவதுடன் அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடமும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து காவலாளி அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் தாக்கி உயிரிழந்த போது திருப்புவனம் அரசு மருத்துவமனையிலிருந்து சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கு உடல் கொண்டு வரப்பட்டு பிறகு அங்கிருந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு இறுதியாக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சி.பி.ஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையில் நான்கு பேர் குழுவினர் ஆய்வு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்
Next Story