திற்பரப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திற்பரப்பில்  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
X
குமரி
குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட உண்ணியூர் கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று (23.07.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து கைப்பேசி காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனாவிடம் திட்ட முகாம்கள் குறித்து பேசினார். இன்று நடைபெற்ற முகாமில் மனுக்கள் அளித்து உடனடி ஆணை பெற்ற பயனாளிகள் கைப்பேசி காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததை முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திட்ட முகாமில் மனு அளித்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கினார். நடைபெற்ற முகாமில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, திருவட்டார் வட்டாட்சியர் கந்தசாமி, திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்ரவி, துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story