முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

X
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2025 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2025) என்ற பெயரில், மாநிலம் முழுவதும் ஆகஸ்ட்-2025 மாதத்தில் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட, மண்டல அளவில் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரில் முன்பதிவு செய்து அதற்கான ஆவணங்களை (ஆதார் மற்றும் புகைப்படம்) சமர்ப்பித்து 16-08-2025 அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும். போட்டிகள் விபரம் மற்றும் குறிப்புகள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story

